யாழில் 14 வயது மாணவி கருக்கலைப்பு!! இரண்டு காதலர்கள் கைது!

யாழில் 14 வயது மாணவி கருக்கலைப்பு!! இரண்டு காதலர்கள் கைது!

யாழில் 14 வயதான பாடசாலை மாணவியொருவர் கருக்கலைப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து, 16,17 வயதான இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்திலுள்ள பொலிஸ் பிரிவொன்றில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது.

14 வயதான பாடசாலை மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரது பெற்றோரின் ஏற்பாட்டில், சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தகவல் யாழ் மாவட்ட பெண்கள், சிறுவர் பிரிவினருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

பொலிசார் சிறுமியின் வாக்குமூலம் பெற்று, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சட்டவிரோத கருக்கலைப்பு நடந்தது உறுதியானது.

சிறுமியின் தற்போதைய மற்றும் முன்னாள் காதலர்கள் அவரை துஸ்பிரயோகம் செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்திருந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் நன்னடத்தை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமூகசீர்கேடு செய்திகள்