ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் இலங்கை பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத இருந்த நிலையில் எந்த கட்சியும் ஆதரவு வழங்காது இருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அவர்கள் பொருப்பேற்று கொண்டார்.மேலும், இருப்பினும் நாடு மிக மோசமான நிலையிற்கு செல்லும் போது தமது வீட்டை தீப்பிடித்து எரிந்த நிலையிலும் இப் பொருப்பை ஏற்றுக் கொண்டார் ரணில், விக்கிரமசிங்க அவர்கள் நாட்டை முன்னர் இருந்ததை விட சற்று உயர்த்தி உள்ளார் என்றே கூறலாம் என அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், அதே போல IMF உடன் பேச்சு வார்த்தை நடத்தி கடன் உதவி பெற முயற்சிகளை எடுத்துள்ளார்.

அதே போல பெற்றோலில் விலை 40 குறைத்தது இந் நேரத்தில் முக்கிய விடயமாகும்.

எதிர்வரும் காலங்களில் பல பொருட்களின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மக்கள் இவ் விடயங்களை நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.

எனவே நாட்டையும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவே இதற்கு மற்றைய கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்.

இலங்கை