வவுனியா வைத்தியசாலையில் புதிய அலுவலகம் திறப்பு.

வவுனியா வைத்தியசாலையில் புதிய அலுவலகம் திறப்பு.

வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் வைத்தியசாலை வளாகத்தில் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளரின் வழிகாட்டுதலுடன் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் இன்றைய தினம் (01-10-2022) காலை 10 மணியளவில் குறித்த அலுவலகத்தின் பணிகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளர் பிரிவிற்கு வருகைதரும் நோயாளர்கள் குறித்த அலுவலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தமக்கான அவசர, அவசிய உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குறைகளை தீர்க்க உதவுவதுடன் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் இந்த ல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்