தண்டவாளங்களை விற்று டொலர் தேடும் இலங்கை!

தண்டவாளங்களை விற்று டொலர் தேடும் இலங்கை!

நெருக்கடிக்கு மத்தியில் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக பழைய இரும்பு தண்டவாளங்களை விற்பனை செய்வதற்கான சர்வதேச விலைமனு கோரலை இலங்கை தொடருந்து திணைக்களம் மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

„அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, பழைய உலோகங்களை சர்வதேச விலைமனு கோரல் மூலம் டொலருக்கு விற்குமாறு நான் அறிவுறுத்தினேன்“ என்று அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

„நாங்கள் பழைய தண்டவாளங்கள் மற்றும் பிற உலோக கழிவுகளை விற்பனைக்காக சேகரிக்கிறோம். இரண்டு வருடங்களாக வட்டி விகிதங்களை நசுக்கி பணத்தை அச்சடித்ததன் பின்னர் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியுள்ளது.

நாட்டில் தொடருந்து திணைக்களத்திலும் தண்டவாளங்கள் பற்றாக்குறையாக இருந்தது. எனினும், தண்டவாளங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதற்காக அனுராதபுரத்திற்கு வடக்கே ஒரு பாதையில் இருந்து அகற்றப்பட்ட சில தண்டவாளங்கள் பயன்படுத்தப்படலாம்” என்றார்.

பழுதடைந்த தண்டவாளங்கள் காரணமாக, தெற்குப் தொடருந்து பாதையில், மணிக்கு 20 கிலோமீற்றர் கதியிலேயே தொடருந்துகள் இயக்கப்பட்டுவந்தன. இதனால் குறித்த தண்டவாளங்களை அகற்றியதாகவும் அவர் கூறினார்

இலங்கை