யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு ; 2 மாதங்களில் 134 பேருக்கு சிகிச்சை !

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு ; 2 மாதங்களில் 134 பேருக்கு சிகிச்சை !

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில்  பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக  சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே  யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முறையான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலைவர்கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்வரவேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

செய்திகள்