மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற ரணில்

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற ரணில்

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார்.

இதன்காரணமாக அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை, பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு, தேசியக் கொள்கைகள், தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகள் உள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோனும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இராஜாங்க ஷெஹா சேமசிங்கவும், முதலீட்டு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத்தும், மகளிர், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கீதா குமாரசிங்கவும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தையடுத்து, மேற்படி இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகம்