காணாமல் போயுள்ள 16வயது பாடசாலை மாணவன்!

காணாமல் போயுள்ள 16வயது பாடசாலை மாணவன்!

கொட்டாவ பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலை மாணவன் கடந்த 7 நாட்களாக காணாமல் போயுள்ளதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த 9ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் மேலும் இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பிரதேசத்தில் உள்ள தொலைபேசி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு வந்து பஸ்ஸில் மகுபுர பகுதிக்கு செல்லும் போது கண்காணிப்பு காணொளி பெறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அவர் பஸ்ஸில் கொட்டாவைக்கு திரும்பியுள்ளார்.

எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், குறித்த சிறுவனைத் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொட்டாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை