ஈழத்து மாணவிக்கு சுவிசில் குவியும் பாராட்டுக்கள்.

ஈழத்து மாணவிக்கு சுவிசில் குவியும் பாராட்டுக்கள்.

சுவிசில் 26 மாநிலங்களில் உள்ள பாடசாலைகளில் UBS KIDS CUP 2022 வங்கி மூலம் மெய்வல்லுநர் போட்டி நடைபெற்று அதில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்கள் தெரிவு செய்து சூரிக்கில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் 10.09.2022 அன்று போட்டி நடைபெற்றது.

அதில் சூரிக் மாநிலத்தில் தெரிவான தமிழ் மாணவி செல்வி அகிலரூபன் காவியா அனைத்து விளையாட்டுகளிலும் முதலாம் இடத்தைப்பெற்று „UPSKIDS CUP 2022“ GOLD MEDAL பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

சென்ற வருடம் இதேபோல் GOLD MEDAL பெற்றிருந்தார், இவரை சுவிசில் உள்ள தொலைக்காட்சிகள் , பத்திரிகைகள் நேர்காணல் செய்துள்ளார்கள்.

இந்த மாணவியை சுவிசில் உள்ள தமிழ் கல்விச்சேவையால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவிலும் பாராட்டி இருந்தார்கள், அத்துடன் சுவிஸ் வாழ் மக்களும் தமிழ் மக்களும் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

ஈழத்து மாணவிக்கு சுவிசில் குவியும் பாராட்டுக்கள் (படங்கள்) | Eelam Student Receives Accolades In Switzerland
உலகம் நம்மவர்