வவுனியாவில்  கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!

வவுனியாவில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத கடவை இல்லாத தாண்டிக்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. .

வவுனியா ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மைக்கல் தினகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிள் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. சடலத்தின் அருகே மதுபாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது மது அருந்தி விபத்துக்குள்ளானாரா அல்லது ஏதேனும் குற்றச் செயல் நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்