வவுனியா புளியங்குள விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா புளியங்குள விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற   விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (13) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி பஞ்சநாதன் குகேந்திரன் (வயது-49) என்ற நபரே  மரணமடைந்தவராவார். 

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகள்