அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

அன்னை பூபதிக்கு இன்று இலங்கையின் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது ஜனநாயக வழியில் நின்று போராடிய அன்னை பூபதிக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டார்

திலீபனின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்தே அன்னை பூபதி தமது போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை அன்னை பூபதியின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்

எனினும் இது தொடர்பாக எந்தவொரு எதிர்கட்சி உறுப்பினரும் இன்று குரல் கொடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே இலங்கையின் நிர்வாக முறை மாற்றப்பட்டு சமஸ்டி கொள்கையின் மூலமே நாட்டை கட்டியெழுப்பமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

செய்திகள் நினைவில்