டிவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்! எலான் மஸ்கிடம் கோரிக்கை

டிவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்! எலான் மஸ்கிடம் கோரிக்கை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனா கடனுதவி வழங்கி வரும் நிலையில் டுவிட்டர் பயனாளர்கள் இலங்கையை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்(Elon Musk) கடந்த 14 ஆம் திகதி தெரிவித்தார்.

இந்த நிலையில் டுவிட்டர் பயனாளர்கள் சிலர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதில் இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள்