யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி!

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (14-04-2022) மாலை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

மேலும் இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 59 வயதான குகாதாசன் பரவேஸ்வரி என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள்