மறைந்த தனது தங்கை குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட உருக்கமான பதிவு 

மறைந்த தனது தங்கை குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட உருக்கமான பதிவு 

தமிழ் திரையுலகின் 90-களில் விஜய், அஜித், சூர்யா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன்.

முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த ஏகப்பட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையும் நடிகையுமான மோனல் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “நீ இப்பொது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு” என பதிவிட்டுள்ளார் சிம்ரன்.

மோனல் தமிழ் சினிமாவிற்கு பார்வை ஒன்றே போதும் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2002 ஆம் ஆண்டு மோனல் சென்னையில் உள்ள தனது ரூம்-ல் தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  

சினிமா