புன்னாலைக்கட்டுவனில்  விஷமிகள் செய்த  செயல்.

புன்னாலைக்கட்டுவனில் விஷமிகள் செய்த செயல்.

அறிவு ஆலயமாகப் போற்றப்பட வேண்டிய சனசமூக நிலையத்தில் விஷமிகள் செய்த அசிங்கச் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

அந்த வகையில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச சனசமூக நிலையத்திற்குள் நுழைந்த இனம் தெரியாத விஷமிகள் அங்கு சிறுநீர் கழித்துள்ளனர்.

இன்று காலை வழமை போன்று மேற்படி சனசமூக நிலையத்திற்குச் சென்ற நிர்வாகசபைத் தலைவர் குறித்த செயல் தொடர்பில் கடும் ஆதங்கம் தெரிவித்ததுடன் இதுபோன்ற செயல் இடம்பெறுவது இது இரண்டாவது தடவை எனவும் வேதனை வெளியிட்டார். தொடர்ந்து அவர் சிறுநீரகம் கழித்த இடத்தைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.

சமூகசீர்கேடு