கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம்!

கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை கவனிக்காது மேசையின் மேல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கைத்திலைபேசியில் மூழ்கியிருந்த  புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி- அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கடமை நேரத்தில் குறித்தவைத்தியர் நோயாளிகளை கவனிக்காது தனது கைபேசியில் மூழ்கியிருப்பது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவரின் ஓய்வு நேரத்தில் அவர் எப்படி இருந்தாலும் , நோயாளி ஒருவர் வெளியில் காத்திருக்க அவரை பாராது இவ்வாறு அம் மருத்துவர் தனது கடமையை செய்யாது தொலைபேசியில், மூழ்கி இருப்பது உள்ளமை கண்டிக்கத்தக்கது என பலரும் கூறியுள்ளனர்.

அதேசமயம் அங்குசென்ற நபர் ஒருவர் வைத்தியர் கடமையில் வெறித்தனமாக இருந்த போது இந்த புகைபடத்தை எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூகசீர்கேடு