இவர் தானாம் தளபதி 66 படத்தில் விஜய் அப்பா

இவர் தானாம் தளபதி 66 படத்தில் விஜய் அப்பா

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால் பீஸ்ட் திரைப்படம் வரும் நாட்களில் வசூலில் பாதிப்படையும் என கூறப்படுகிறது. மேலும் KGF 2 திரைப்படமும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 66 படமாக உருவாகவுள்ள தளபதி 66-ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஆரம்ப பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மேலும் தற்போது தளபதி 66 படத்தில் விஜய் அப்பாவாக நடிகர் சரத்குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அப்படத்தில் விஜய் இரண்டு பெரிய சகோதரர்கள் இருப்பார்களாம். அந்த கதாபாத்திரங்களில் 90-களின் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

சினிமா