12 ஆண்டுகளாக மகனை தேடி அலைந்த தந்தை உயிரழப்பு

12 ஆண்டுகளாக மகனை தேடி அலைந்த தந்தை உயிரழப்பு

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன தனது மகனை 12 ஆண்டுகளுக்கு மேலாக தேடிவந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த முனியாண்டி கறுப்பையா என்ற தந்தை உயிரிழந்துள்ளார். கடந்த கால யுத்த காலத்தின் போது தனது மகனான மோகனதாஸ் காணாமல் போன நிலையில் அவரை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தந்தை மகனை காணாம்லேயே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வடக்கு கிழக்கு பகுதிகளில் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை தேடி தேடி சுகயீனம் அடைந்து உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் நம்மவர்