சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் என்பதும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்தியா