லண்டனில் இலங்கையருக்கு கிடைத்த விருது!

லண்டனில் இலங்கையருக்கு கிடைத்த விருது!

லண்டனில் நடைபெற்ற 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார். லைஃப் ஆஃப் பை நாடகம் சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளையும் பெற்றது.

விருது வாங்கிய பின்னர் ஹிரன் பேசுகையில், இந்த விருதினை என் சொந்த நாடான இலங்கைக்கு காணிக்கை செய்கிறேன்.

இப்போது இலங்கை கடுமையான சூழலில் இருக்கிறது, இப்போது அங்கு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

ஹிரன் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார், Lanka Children’s and Youth Theatre Foundationல் இருந்து டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்திகள்