யாழ்.வர்த்தக நிலையங்களுக்கு காஸ் விநியோகம்

யாழ்.வர்த்தக நிலையங்களுக்கு காஸ் விநியோகம்

யாழ்.குடாநாட்டில் வர்த்தக நிலையங்கள் பலவற்றிற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை(10.4.2022) அடைமழைக்கு மத்தியிலும் லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயுக் கொள்கலன்கள் மேற்படி நிறுவன முகவர்களால் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த எரிவாயுக் கொள்கலன்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்பட்டமையாலும், மக்கள் கொள்வனவில் அதிக ஆர்வம் காட்டியமையாலும் விநியோகிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே எரிவாயுக் கொள்கலன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதேவேளை, சில வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவியதையும் அவதானிக்க முடிந்தது.

செய்திகள்