சிலிண்டர்களை குறுக்காக வைத்து  போராட்டம்

சிலிண்டர்களை குறுக்காக வைத்து போராட்டம்

திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும், எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை.

சுமார் 3 மணிநேரம் காத்திருந்த மக்கள், வீதியின் குறுக்காக சிலிண்டர்களை வைத்து, அதில் ஏறியிருந்தும், சிலிண்டர்களை கிடத்திவிட்டு அதில் அமர்ந்திருந்தும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், இரவு எட்டுமணிவரையிலும் அவ்வீதியின் ஊடாக போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

செய்திகள்