வெளிநாடுகளுக்கு செல்ல சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்;

வெளிநாடுகளுக்கு செல்ல சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்;

நாட்டில காணப்படும் நெருக்கடியான நிலைமை காரணமாக இலங்கையில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்காக கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பது மேலும் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை அண்மைய காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்வது அதிகரிததுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல பணத்தை புரட்டுவதாக சொத்துக்களை மக்கள் விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது. அதேவேளை சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்