குருநாகல் பகுதியில் தீயணைப்பு படைவீரர் ஒருவர் விபத்தில் மரணம்!

குருநாகல் பகுதியில் தீயணைப்பு படைவீரர் ஒருவர் விபத்தில் மரணம்!

எமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த குருநாகல் தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வீதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது தீயணைப்பு வாகனத்தில் பயணித்த நான்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாரதி ஆகியோர்; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹேனமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்