மலேசியாவில் காருக்குள் மறைந்திருந்த வெளிநாட்டவர்கள்  கைது

மலேசியாவில் காருக்குள் மறைந்திருந்த வெளிநாட்டவர்கள் கைது

மலேசியாவின் PASIR MAS பகுதியில் நடந்த வழக்கமான வாகன சோதனையின் போது  

Proton Waja வகை காரில் மறைந்திருந்த 10 வெளிநாட்டவர்களை மலேசிய பொது நடவடிக்கைகள் படை கைது செய்துள்ளது. 

“காரை சோதனையிட்ட போது, அதில் 9 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் எவரிடத்திலும் முறையான பயண ஆவணங்கள் இல்லை,” என பொது நடவடிக்கைகள் படையின் கட்டளை தளபதி Azhari Nusi தெரிவித்திருக்கிறார். 

இவர்களை அழைத்து வந்த மலேசியரான கார் ஓட்டுநர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் தற்போது சிறை வைக்கப்பட்டிருக்கிறார். இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் மியான்மரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

மியான்மரைச் சேர்ந்த 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இந்த 10 பேரும், மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள பல சட்டவிரோத பாதைகள் வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த கைதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் Kota  Baru  பகுதியில்  ஆட்கடத்தல் ஈடுபட்டதாக மற்றொரு மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

உலகம்