கண்டுக்கொள்ளாத அனிருத், முன்னணி நிறுவனம் அதிரடி முடிவு.

கண்டுக்கொள்ளாத அனிருத், முன்னணி நிறுவனம் அதிரடி முடிவு.

அனிருத் இன்று ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் கலக்கி வரும் இளம் இசையமைப்பாளர். இவர் இசையில் பாடல்கள் வந்தாலே கண்டிப்பாக ஹிட் தான் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில் தெலுங்கில் ஆஹா என்ற ஓ டி டி தளம் தொடங்கப்பட்டது, அதன் மூலம் நிறைய படங்கள் மற்றும் வெப் சீரிஸுகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இதில் அனிருத்தை விளம்பர தூதராக நியமிக்க, அந்த நிறுவனம் முடிவு செய்து, ஐதராபாத் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அனிருத்தை தங்க தட்டில் வைத்து தான் தாங்கியுள்ளனர், சிறப்பான விருந்து கொடுத்து சென்னை அனுப்பிவிட்டுள்ளனர்.

இங்கு வந்தவுடன் அனிருத்தை ஆஹா நிறுவனத்தால் தொடர்புக்கொள்ளவே முடியவில்லையாம்.

ஒரு கட்டத்தில் கோபமான அந்த நிறுவனம் இனி அனிருத்தே வந்தாலும், நமக்கு அவர் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம்.

சினிமா