வவுனியாவில் கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (07 ) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது

ஐக்கிய மக்கள் அரணின் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை அடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கோட்டபாய பதவி விலகு, இந்த அரசாங்கம் வேண்டாம், அமெரிக்காவுக்கு ஓடுங்கள், எங்களை வாழவிடு’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களையும் எழுப்பியதுடன் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் சகோதரர்களான மஹிந்த, பசில் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.

மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேரூந்து நிலையம் என்பவற்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் அரை மணிநேரம் பிரதான வீதியை மறித்தமையால் ஒரு வழிப் பாதையூடான போக்குவரத்துக்களை பொலிசார் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டிருந்தனர்.

செய்திகள்