தொடரும் சோகம் ; மகனைத் தேடி அலைந்த மற்றொரு தாயாரும் மரணம்!

தொடரும் சோகம் ; மகனைத் தேடி அலைந்த மற்றொரு தாயாரும் மரணம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றொரு தாயாரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த காளிமுத்து சுப்பம்மா (கமலா) என்பவரே தனது 69வது வயதில் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அன்னாரின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செய்ததுடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

இந்த அஞ்சலி நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் 1873வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறை போராட்டம் இடம்பெறும் கொட்டகையில் இடம்பெற்றிருந்தது.

உயிர்ழந்தவரின் மகன் சுப்பையா சிவலிங்கம் 13/01/2000 வவுனியாவில் வைத்து இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்