தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை

சுழிபுரம் தொல்பொருள் சிவபூமி முதியோர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை(07.4.2022) பிற்பகல்-3 மணிக்கு மேற்படி முதியோர் இல்லத்தின் பாலச்சந்திரன் அரங்கில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த விழா நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த திருமதி.இராஜாம்பாள் பாலச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், சங்கானை பிரதேச செயலாளர் திருமதி.பிரேமினி பொன்னம்பலம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது புதிய கட்டடத் தொகுதித் திறப்பு நிகழ்வு மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.

நிகழ்வுகள்