3 தூதரங்களை மூடியது சிறிலங்கா

3 தூதரங்களை மூடியது சிறிலங்கா

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரங்களிலுள்ள சிறிலங்கா  தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்துக்கமைய வெளிநாடுகளில் சிறிலங்காவின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் பொது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகள்