இலங்கை அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது

இலங்கை அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது

சாதாரண பெரும்பான்மைக்கு 113 ஆசனங்கள் தேவை-
தற்போது இருப்பவை 105.

எதிர்க்கட்சியில் இருந்தவாறே அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 8 உறுப்பினர்களுடன் ஆளும் அரசாங்கத்தில் கூட்டணியில் 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்ததனர்.

தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறி, சுயேட்சையாக செயற்படவுள்ளதாக சபையில் அறிவிததுள்ளனர்.

இதன்படி, 149 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று 105 ஆசனங்களையே சபையில் கொண்டுள்ளது.

113 ஆசனங்களே இலங்கை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை என்பதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதேவேளை அவசகாலச் சட்டத்த நீடிக்க ஆதரவு வழங்கப் பொவதில்லை என சுயேட்சையாக செயற்பட தீர்மானித்தள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் காலாவதியாகும் நிலை எற்பட்டுள்ளது.

செய்திகள்