இலங்கையின் நிலை குறித்து லாஸ்லியா  உருக்கமான பதிவு.

இலங்கையின் நிலை குறித்து லாஸ்லியா உருக்கமான பதிவு.

 இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாட்டின் நிலமை குறித்து நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை விடுத்துள்ளார்.

அவரது பதிவில்,

“இலங்கை மக்களாகிய நாம் மோசமான போர் காரணமாக நம் குடும்பத்தினர் உட்பட அனைத்தையும் இழந்தோம். சுனாமியை சந்தித்தோம், கடந்த 2019-ல் தேவாலயங்களில் வெடி குண்டு வெடித்ததை எதிர்கொண்டோம்.

கொரோனாவை எதிர்கொண்டுவருகிறோம். தற்போது பொருளாதார சிக்கல்களை சந்தித்தித்துள்ளோம். இது அனைத்தும் நமது தவறு அல்ல. நாம் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். காரணம் நாம் இலங்கை மக்கள்.

எந்தவொரு நிலையிலும் எதிர்கொள்வதற்கு தேவையான சக்தி நம்மிடம் இருக்கிறது. இப்பொழுது நாம் ஒன்றிணைவோம், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.  

செய்திகள்