தனி உடை, உணவு ரூல்ஸ் இல்ல! – ஆசிரமம் தொடங்கிய அன்னபூரணி சாமியார்!

தனி உடை, உணவு ரூல்ஸ் இல்ல! – ஆசிரமம் தொடங்கிய அன்னபூரணி சாமியார்!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான பெண் சாமியார் அன்னபூரணி புதிதாக ஆசிரமம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருபவர் பெண் சாமியார் அன்னபூரணி. கடந்த ஆண்டு செங்கல்பட்டில் இவரது நிகழ்ச்சி ஒன்று நடந்த வீடியோ வைரலான நிலையில், இவர்குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் ஒன்றை தொடங்கியுள்ளார் பெண் சாமியார் அன்னபூரணி. இந்த ஆசிரமத்தில் பயிற்சி பெற பிரத்யேக உடை, உணவு பழக்க வழக்கங்கள் தேவை இல்லை என்றும், நடைமுறை வாழ்க்கையில் ஆன்மீக பயிற்சி அளிக்கும் ஆசிரமம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா