விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சாரதி விளக்கமறியலில்…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சாரதி விளக்கமறியலில்…

கிண்ணியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்புக்கு காரணமான பஸ் வண்டியின் சாரதியை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (1) உத்தரவிட்டார்.

திருகோணமலை கூம்புகார் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயரிழந்தவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராகக் கடமையாற்றி வந்த ரஞ்சுதன் ஜோதிமணி வயது 43 என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று த முன்தினம் (31) மாலை திருகோணமலை – மட்டக்களப்பு பிரான வீதி, உப்பாற்று சிறுவர் பூங்காவிற்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலாப் பஸ் வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்