பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் ?

பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் ?

நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கதாப்பாத்திரத்தின் பெயர் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. 

‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் விஜய் கதாப்பாத்திரத்தின் பெயர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ’வீரராகவன்’ என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

சினிமா