அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் அவசரக் கூட்டம்

அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் அவசரக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின் ஆளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த சம்பவம் நேற்றிரவு மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கூட்டத்தை சுழற்சி முறையில் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்படும் எனத் தெரியவருகிறது.   

செய்திகள்