காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் கரவெட்டி தவிசாளர் கைது!

காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் கரவெட்டி தவிசாளர் கைது!

காசோலை மோசடிக் குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளர் வே.ஐங்கரன் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளிநாடுகளுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற தனியார் நிறுவனத்தையும் இயக்கி வருகின்றார். அந்த நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற காசோலை கொடுங்கல் வாங்கல்களில் முறைகேடுகள் இடம்பெற்றன என்று தெரிவிக்கப்பட்டே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வழங்கிய காசோலைகள், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதால் திரும்பியுள்ளன. இதையடுத்தே தவிசாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செய்திகள்