யாழில் மாயமான மூதாட்டி கண்டுபிடிக்கப்பட்டார்!

யாழில் மாயமான மூதாட்டி கண்டுபிடிக்கப்பட்டார்!

யாழ் – கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய்ப்பட்ட நிலையில் அவர் தற்போது வவுனியாவில் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தினை வவுனியா காவல்துறையினர் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு எவ்வாறு வந்தார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்குவில் – தலையாழி – சேர் பொன்னம்பலம் வீதியில் வசித்துவந்த கந்தையா தனபாக்கியம் (வயது – 65) என்ற மூதாட்டியைக் காணவில்லை என அவரது மருமகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்