கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்!

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்!

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வீதியில் சென்ற நபர் ஒருவரை, வாகனத்தில் வந்த கும்பலொன்று மோத முயன்ற நிலையில், பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆபத்தான நிலையில் இரத்தக் காயத்துடன் காணப்பட்ட நபர் ஒருவரை வாகனம் ஒன்றில் மூவர் ஏற்றி வந்திருக்கின்றனர்.

இதன்போது வாகனத்திலிருந்து காயத்துடன் காணப்பட்ட நபர் தப்பி ஓடுவதற்கு முயன்று வீதியில் குதித்து ஓடியுள்ளார். இரண்டு தடவைகள் அவர் மீது மோத முயன்று இரண்டாவது தடவை குறித்த வாகனத்தை செலுத்தி வந்த நபரை, கடத்தல் காரர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மோதியுள்ளனர்.

சம்பவத்தினால் குறித்த நபர் படுகாயம் அடைந்துடன், அதேவேளை வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அடுத்து வாகனத்தில் வந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனகபுரம் வீதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்தே அந் நபர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் அதிதீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இச் சம்பவம் கொலை முயற்சியாக இருக்கலாமா என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

செய்திகள்