தமிழகம் வரும் ஈழத் தமிழர்களை இவ்வாறு செய்யாதீர்கள்; சீமான் விடுத்த கோரிக்கை!

தமிழகம் வரும் ஈழத் தமிழர்களை இவ்வாறு செய்யாதீர்கள்; சீமான் விடுத்த கோரிக்கை!

இலங்கையில் இருந்து படகுகளின் மூலம் அடைக்கலம் தேடி தமிழகம் வரும் தமிழர்களை கைதுசெய்து வழக்குத் தாக்கல் செய்து மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, மக்கள் அன்றாடச் செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கு தள்ளப்படும் செய்திகள் கவலையளிக்கின்றது.

இத்தகைய கையறு நிலையில், தமிழகத்தில் தஞ்சம்கோரி அவர்கள் கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களை கைது செய்து வழக்குகள் தாக்கல் செய்து மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமையாகும்.

இந்தியா