மின்வெட்டு நேரத்தில் பாடசாலையில் திருட்டு

மின்வெட்டு நேரத்தில் பாடசாலையில் திருட்டு

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது.

அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளையில், பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமராக்கள் செயற்படாது இருந்தமையை பயன்படுத்தி குறித்த திருட்டு சம்பவம் இடப்பெற்றுள்ளது.

அதேவேளை பாடசாலைக்கு அருகில் பொலிஸ் , இராணுவம் இணைந்த காவலரண் ஒன்றும் காணப்படுகின்றன.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்