புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாமே! சிங்கள பெண்கள்

புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாமே! சிங்கள பெண்கள்

நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் அவரிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாமே என சிங்கள பெண்கள் கேட்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்கள் துன்பப்படுவதனை, வேதனைப்படுவதனை, தெருக்களில் இறப்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்காக நாம் அனுதாபப்படுகின்றோம்.

இதே விடயங்கள் எங்களது பகுதிகளில் நடக்கும் காலத்தில் விமானக்குண்டுகளுக்கும், பொஸ்பரஸ் குண்டுகளுக்கும், எறிகணைகளுக்கும், கொத்தணி குண்டுகளுக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் அதனை ஒரு நாட்டின் விடுதலையாக, தேசத்தின் விடுதலையாக இனப்படுகொலையை மறைத்து செய்த இலங்கை அரசு இன்று அதனது விளைவுகளை அனுபவிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகள்