தெல்லிப்பழை துர்க்காதேவியில்  தமிழ்நாடு  பாடசாலை அதிபர்

தெல்லிப்பழை துர்க்காதேவியில் தமிழ்நாடு பாடசாலை அதிபர்

நேற்றுப் புதன்கிழமை(23.03.2022) இடம்பெற்ற வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவாசல் இராஜகோபுரக் கும்பாபிஷேகத்தில் இந்தியா தமிழ்நாடு மாயவரம் (மயிலாடுதுறை) வேதாகமப் பாடசாலை அதிபர் சிவஶ்ரீ. ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் கலந்து கொண்டு வேதபாராயணம் நிகழ்த்தினார்.

மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இராஜகோபுரக் கும்பாபிஷேக கிரியைகளைச் சிறப்பாக நிகழ்த்தினர்.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த சிவாச்சாரியார்களும் மேற்படி கும்பாபிஷேக கிரியைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவை ஆதீன ஹர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள், கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டு அருளாசி வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா செய்திகள்