இலங்கைத் தமிழர்களுக்கு  விரைவில் விடிவுகாலம் !தமிழக அரசு

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம் !தமிழக அரசு

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.


தமிழக வரவு செலவுத் திட்ட கடைசி நாள் விவாதத்தின் போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்

அத்துடன் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


”இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள். மேலும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பல கி.மீ. நீள வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் ஈழத் தமிழர்கள் உணவு உண்ண முடியாமல் அதிக விலை கொடுத்தும் பாணை மட்டுமே சாப்பிடும் நிலை உள்ளது.”


”இதனால் ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகிறார்கள். அவ்வாறு வரும் அவர்கள் மீது வழக்குப் பதியாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.


இதுகுறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ”இலங்கையில் இரண்டாது போர் தொடங்கி உள்ளது. அது தான் பொருளாதார யுத்தம். இந்த போரிலும் பெரிதும் தமிழீழத் தமிழர்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிங்கள இன ஒடுக்குமுறையால் நாட்டை விட்டு தமிழர்களே அகதிகளாக வெளியேறினர்.

இப்போது,பொருளாதார நெருக்கடியால் தமிழர்களே அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.


பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் ஈழத்தமிழர்களை மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu வரவேற்று வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள முகாம்களுக்கு அனுப்பாமல் தனி முகாம்களை அமைக்க வேண்டும். வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா