வெளிநாடொன்றில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை தமிழர்

வெளிநாடொன்றில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை தமிழர்

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில்  ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை (34) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் புதிதாக சரவணா ஏஜென்சி என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடோன் போன்ற அமைப்பு உள்ள பெரிய கடையில் கட்டுமான பணிக்கு தேவையான எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனைக்கு புதிதாக இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அக் கடையில் யுபிஎஸ் பொறுத்தும் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க இலங்கையரான சுரேக்ஷ் வந்துள்ளார்.

மாலையில், கடை மேலாளர் அழைப்பின் பேரில் சுரேசை பார்ப்பதற்காக நண்பர்கள் சென்றபோது, சுரேஷ் மர்மமான முறையில் சடலமாக தரையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டு சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று உறுதி செய்த நிலையில், கடை நிர்வாகத்தினரிடம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறப்பிற்கான காரணம் குறித்து கேட்டபோது அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், கடை மேலாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டடதாக கூறப்படுகின்றது. இதேவேளை உயிரிழந்த சுரேஷிற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவுவதால் பொலிசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா