நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி.(காணொளி)

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி.(காணொளி)

கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே முனுசாமி என்ற பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது, அங்கு வந்த நடிகர் சிம்புவின் கார் முதியவர் மீது மோதியது.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசன் கார் என்பது உறுதியாகியுள்ளது. ஓட்டுநர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, காருக்கு பின்னால் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார். ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டிரைவர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது குறித்த CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்தியா