முல்லைத்தீவு விபத்தில் மாணவ ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளர் பலி!!

முல்லைத்தீவு விபத்தில் மாணவ ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளர் பலி!!

முல்லைத்தீவு வட்டுவாய்க்காலில் 20/03/2022(ஞாயிற்றுகிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, அரச பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

விபத்து நடந்த போது தனியார் பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளனர்.

இதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

செய்திகள்