120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது

120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட நபரொருவரை ஆர்மர் வீதி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த தங்கத்தை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்து செல்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் இன்று யாழ்ப்பாணம் மாதகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்திகள்