போதையில் தன்னைத் தானே குத்திக்கொண்ட இளைஞர்.

போதையில் தன்னைத் தானே குத்திக்கொண்ட இளைஞர்.

இந்தியாவில் நேற்று ஹோலி கொண்டாட்டத்தின்போது, குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில், இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் சென்ற வியாழன் இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயது நபர் ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார்.

கையில் கத்தியுடன் தனது நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்த கோபால் சோலங்கி (Gopal Solanki), ஸ்டண்ட் செய்ய முயன்றபோது தவறுதலாக தன்னைத்தானே குத்திக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் அதிக அளவில் குடிபோதையில் இருக்கும் கோபால் கத்தியால் நான்கு முறை குத்திக்கொள்வதைக் காணலாம். வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்

சோலங்கியின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்

ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா