மோடியின் இலங்கைப் பயணம் இரத்து!

மோடியின் இலங்கைப் பயணம் இரத்து!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமான எந்தக் காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும்,

அதன் பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும் அதன் பின்னர் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையிலேயே அவரது இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்து விட்டு இணையத்தள தொழில்நுட்பம் ஊடாக பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்ற மோடி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் வெளியிடுவதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தவிர்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செய்திகள்